தமிழகம்

காட்பாடி அருகே காமக்கொடூரனின் கொடுமை செயல், கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிய கொடுமை, கைது !!

116views
ஆந்திரமாநிலம் சித்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருப்பூர் பகுதியில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.  இந்த நிலையில் 4 மாதம் கர்ப்பிணியான அவர் ஊருக்கு கோயம்பத்தூரிலிருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்தபோது வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில்வே நிலையம், கே.வி.குப்பம் ரயில்நிலையம் அருகே சென்றுகொண்டு இருந்தபோது அந்த இளம்பெண் கழிவறைக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த 2 பேர் அந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தி உள்ளான்.
பெண்ணின் அலறல் சத்தம் போடவே, அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு அடுத்த பெட்டிக்கு ஓடிவிட்டான். இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது, படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு வேலூர் அடுக்கம்பாறைஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாக செயல்பட்ட காவல்துறையினர் சிசிடிவியின் அடிப்படையில் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைசேர்ந்த கேடி ஹேமராஜ் (30) என்பவனை கைது செய்தனர். இவன் ரயில்களில் பல பெண்களிடம் அத்துமீறலில் ஈடுப்பட்டது தெரியவந்தது, அதேப்போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரக்கோணம் வேலூர் ரயிலில் ஒரு பெண்ணிடம் செல்போன் பறித்து அத்துமீறியவன் இந்த ஹேம்நாத்.  ரெயில்வே எஸ்.பி.உத்தரவின்பேரில் தலைமறைவான்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் பயணிகளிடம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!