தமிழகம்

காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டு எதிரில் திமுக ஒன்றிய சேர்மன், ஒன்றிய செயலாளர் சட்டையை பிடித்து சண்டை : அமைச்சர் எச்சரிக்கை !!

42views
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய சேர்மனாக வேல்முருகனும், காட்பாடி தெற்குபகுதி செயலாளராக கருணாகரனும் உள்ளனர்.
நேற்று பொங்கல் நிகழ்ச்சிக்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு வந்து இருந்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் அமைச்சரை சந்திக்க வந்திருந்தனர். அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வேல்முருகனும், கருணாகரனும் சட்டையை பிடித்து அடிதடியில் ஈடுப்பட்டனர். என்ன செய்வது என்று காவல்துறையினர் அதிர்ச்சியில்உறைந்தனர். கட்சியினர் சமரசம் செய்து அமைச்சரிடம் அழைத்து சென்றனர். அமைச்சர் 2 பேரையும் டோஸ் விட்டு அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  (படம்): தங்க நகைகளை அணிந்த நபர்தான் காட்பாடி சேர்மன் வேல்முருகன்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!