சினிமா

விளையாட்டின் விபரீதத்தை பேசும் வித்தியாசமான கலை முயற்சி.

43views
சீசா – திரை விமர்சனம்
புலனாய்வில் தொடங்கி புலனாய்வில் முடியும் கதை.
ஆதவன் பணக்கார குடும்ப பையன். நடுத்தர ரிட்டையர்ட் தமிழாசிரியர் மகள் மாளவிகாவை காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். ஒருநாள் ஆதவன் வீட்டு வேலைக்காரன் இறந்து விடுகிறான். அவனை யாரோ மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்திருப்பதாக போலீஸ் விசாரணனையை ஆரம்பிக்க கதை சூடு பிடிக்கிறது. வீட்டு வேலைகாரர்களில் தொடங்கி ட்ரீட்மெண்ட் கொடுக்கும் மருத்துவர் வரை என்கொய்ரி நடக்க அடுத்தடுத்த காட்சிகளால் படம் ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பிக்கிறது.  ஆதவனுக்கு மனப்பிறழ்வு நோய் இருப்ப தெரிய வருகிறது. இந்த நேரத்தில் ஆதவனும், மாளவிகாவும் காணாமல் போய்விடுகின்றனர். அவர்கள் மீண்டும் கிடைத்தார்களா. வீட்டு வேலைக்காரனின் கொலைக்கு என்ன காரணம் போன்ற கேள்விகளுக்கு விடைதான் சீசா படத்தின் கதை.

கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று.
முகிலன் என்ற கதாபாத்திரத்தில் இன்ஸ்பெக்ட்டராக வரும் நட்டி நடராஜ் விரைப்பாக வந்து விறுவிறுப்பு கூட்டுகிறார். அவருடன் பயணிக்கும் ஆதேஷ் பாலா உதவி காவல்துறை அதிகாரியாக வந்து தனக்கான வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறார்.
ஆதவனாக நிஷாந்த் ரூசோ மாளவிகாவாக பதினிக்குமார், இயக்குனர் அரவிந்தராஜ், நிழல்கள் ரவி இப்படி எல்லோரின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
பெருமாள் மணிவண்ணன் ஒளிப்பதிவால் கவனிக்க வைக்கிறார். வில்சி ஜெ சாஸி படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பு குறையாமல் கொண்டுச் செல்ல துணை புரிந்திருக்கிறது.
எஸ்.சரண்குமார் பின்னணி இசை ஸ்கோர் செய்வதை பாடல்களிலும் உணர முடிகிறது..
கே செந்தில்வேலனின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் குணசுப்பிரமணியம் சமூகத்தில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சனை ஒன்றை கையிலெடுத்து அதை முழுநீள திரைப்படமாக கொண்டு வந்திருப்பதில் வெற்றி பெற்றுக்கிறார்.
மொத்தத்தில் சீசா – விளையாட்டின் விபரீதத்தை பேசும் வித்தியாசமான கலை முயற்சி.
விமர்சனம் : RJ நாகா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!