தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் இராமன்புதூரில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா

30views
கன்னியாகுமரி மாவட்டம் இராமன்புதூரில் சமூக சேவகர் – மருத்துவர் திகோ நாகேந்திரன் கொரோனாவை எதிர்த்துப் போராடிய முதல் தேசிய போராளி ( கொரோனா பாதிப்பு வேளையில் முழு ஊரடங்கு நேரத்தில் கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் நிறுவிய தினத்திலும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபெற்ற தமிழ் பரப்புரையிலும் , கவிமணியை சிறப்பு செய்த நாட்களிலும் மற்றும் தேரூர் புலவர் சிவதானு , தியாகி முத்து கருப்பன், தமிழறிஞர் இளங்கோ ஆகியோர் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவ உதவியும் பொருள் உதவியும் செய்தவர் ) தலைமையில் நடைபெற்ற விழாவில் ” 30 – கோடி முகமுடையால் எனினும் சிந்தை ஒன்றுடையாள் ” என்று ஒருமைப்பாட்டுக்கு வித்திட்ட தேசிய கவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவில் பாரதியார் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு. எம்.ஆர் .காந்தி நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு கலந்து கொண்டவர்களில் தேவைப்படுவோருக்கு புத்தாண்டை வழங்கி சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் அண்ணாதுரை, அறிஞர் இளங்கோ, ரவி, கண்ணன் , திருமதி அமுதா, ராணி ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!