கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : குடும்ப உறவுகள்

66views
நெல்லை கவி க.மோகனசுந்தரம்
உலகத்தில் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே விஷயம் உறவுகள். இவ்வளவு பணம் தருகிறேன் எனக்கு தாய் மாமனாக இரு… சித்தப்பாவாக இரு என்று உறவுகளை வாங்க முடியுமா?
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அப்படி என்றால் ஒரு குடும்பம் பலருக்கு வழிகாட்டியாக, படிப்பினையாக இருக்க வேண்டும் என்று பொருள்.
ஆனால் சில குடும்பங்கள் அப்படியானதாக இருக்கிறதா? நவக்கிரகங்கள் போல் உறவுகள் ஒன்றுக்கொன்று முகம் காணாமல் திருப்பிக் கொண்டிருக்கிறது.
தந்தை மகனிடம் பேசுவதில்லை. மகன் தாயிடம் பேசுவதில்லை அக்கா தமக்கையிடம் பேசுவதில்லை.  தாய் மாமன் உடன் உறவு இல்லை. சித்தப்பா உடன் உறவில்லை. கேட்டால் ஏதாவது ஒரு உப்புச் சப்பில்லாத காரணங்களை கூறுவார்கள். அன்று அப்படி செய்துவிட்டான்… இப்படி சொல்லி விட்டான் என்ற நொண்டிச்சாக்கு.
இதையெல்லாம் தவிர்க்க மனம் விட்டு பேசுங்கள். மனதார பேசுங்கள். குறைகளைச் சொல்லுங்கள் நிறைகளைப் பாராட்டுங்கள் தவறென்றால் சுட்டிக் காட்ட தயங்காதீர்கள். உங்கள் மீது தவறென்றால் திருத்திக் கொள்ளுங்கள்.
கூட்டிக் கழித்து பார்த்தால் எல்லா பிரச்சனைக்கும் பணம் ஒன்றே பிரதானமாக இருக்கிறது.  உறவுகளை இழந்து அல்லது பிரிந்து பணத்தை வைத்து என்ன பயன்?
அடுத்த ஜென்மத்தில் இந்த உறவுகளோடு பிறப்போம் என்பது எந்த அளவு உண்மை. வாழும்போது உண்மையாகவாழ்வோம். ஒற்றுமையாக இருந்து குடும்ப நலனுக்காக ஒத்துழைப்போம் ஒருவருக்கொருவர்.
ஒரு குடும்பத்தின் ஒற்றுமையே இவ்வளவு முக்கியமெனில் ஒரு தேசத்தின் ஒற்றுமை எவ்வளவு இன்றியமையாதது.
முதலில் குடும்பங்களை சீரமைத்து விட்டு பின்பு தேசத்தை சீரமைப்போம்.
( தொடர்ந்து பயணிப்போம் )

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!