தமிழகம்

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பார்க்கிங் இடத்தை காலிசெய்ய சொல்லி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மிரட்டல்!!

30views
வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் காட்பாடி வி. ஜி.ராவ் நகரை சேர்ந்த ரிஷிக்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே நான் பார்கிங் சென்டர் நடத்தி வருகிறேன். இந்த இடம் ஆந்திர மாநிலம் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பிரம்மானந்தா மற்றும் சேகர் ரெட்டிக்கு சொந்தமானது. அவர்களின் அறிவுரைப்படி நான் பார்கிங் சென்டர் நடத்தி வருகிறேன்.  இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக பார்கிங் சென்டரை காலி செய்யும் படி மிரட்டல் விடுத்தார். எனவே உடன் நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.  தகுந்த நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. மதிவாணன் கூறினார்.  இதற்கு முன்னாள் அமைச்சர் வீரமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!