தமிழகம்

மொழிவழி மாநிலம் தமிழ்நாடு அமைந்த நாள் விழாவினை தமிழர் தன்னுரிமைக கட்சி சார்பில் சென்னையில் கொண்டாடப்பட்டது.

61views
இந்திய விடுதலைக்குப் பின் பல்வேறு மொழியினரும் தங்களுக்கென தங்கள் மொழி பேசவும் ஆளவும் ஒரு நில பரப்பு வேண்டும் என குரல் கொடுத்த நிலையில்.. தமிழர் நமக்கென ஒரு தனி நிலம் மாநிலம் வேண்டும் என எழுந்த பெரியோர்களால் போராடி பெறப்பட்டதே இன்றைய நிலபரப்பு. என்ற தமிழ்நாடு மா..நிலம்! அதனை சிறப்பித்து பாராட்டும் வகையில் தமிழர் தன்னுரிமைக் கட்சி அதன் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் பாண்டியன் கடைத்தெரு சாலையில் இருக்கும் ஆலயம்மன் திருக்கோயில் அருகில் உள்ள சிலம்புச் செல்வர் ஐயா ம பொ சிவஞானம் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்க நிகழ்வினை நடத்தியது. அதனை தமிழர் தன்னுரிமைக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அயனாவரம் இராம பாபு வரவேற்க பாவலர் மு இராமச்சந்திரன் அவர்களின் தமிழ்த் தேசிய உரையுடன் தொடங்கியது.
அதில், மக்கள் தேசிய கட்சியின் தலைவர் சேம நாராயணன், தமிழ் தேசிய எழுத்தாளர் அறிஞர் அருகோ, தமிழ்நாடு சோசலிச்டு தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம், உலகத் தமிழின பேரியக்கம் தலைவர் சந்திரசேகரன், கடல்சார் மக்கள் நலச்சங்கமம் தலைவர் பிரவீன்குமார் பரதவர், தமிழ்நாடு ராட்டிரிய லோக்தள் மாநில தலைவர் செயசிங், மறைமலைநகர் ஞானதுரை ஞானதுரை மாவட்டஎன் சி பி தலைவர், கவிச்சுடர் சிந்தை வாசன், ஓகக்கலைஞர அசித்தர், கவிஞர் மதிஅரசு, முனைவர் சபார், வெ சந்திரமோகன், ப சந்தானம், வை மா குமார், புரசை கோ தமிழேந்தி, இராயபுரம் பிரான்சிசு, வழிக்கறிஞர் சென்னம்மாள், மோகன் பாண்டுரங்கன் என பலரும் கலந்து கொள்ள பாக்கம் வாசுதேவன் நன்றியுரையாற்றினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!