56
குளிர்காலம் அல்லது பனிக்காலம் என்பது மிதவெப்ப கால நிலை உள்ள இடங்களில் இலையுதிர் காலத்திற்கும் இளவேனிற் காலத்திற்கும் இடையில் உள்ள குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம். இந்த காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும் பகல் நேரம் குறைவாகவும் இருப்பதுடன் சில நாடுகளில் பனிமலை பெய்யும்.
குளிரான காலை மக்களுக்கு வித்தியாசமான உணர்வுகளைத் தருகிறது. காபி, தேநீர், சூடான சாக்லேட் போன்ற பானங்கள் அதிகமாக விரும்பப்படுகின்றன. முதுகு தண்டில் குளிர்ச்சி பரவுவதால் மக்கள் சூரிய ஒளிக்காக ஏங்குகின்றனர்.
விலங்குகளுக்கு சரியான இருப்பிடம் இல்லாததால் அவைகள் சூரிய கதிர் தேடி அலைகின்றன. ஒரு காலகட்டத்தில் இருந்தும் விடுகின்றன. ஆனால் குளிர் காலத்தில் மக்கள் நடைபயிற்சியால் புதிய காற்றை அனுபவிக்கின்றனர். மக்கள் இக்காலத்தை விரும்புகிறார்கள் ரசிக்கிறார்கள். ஏனெனில் கொசுக்கள் பள்ளிகள் இல்லாததை விரும்புகிறார்கள் இக்காலத்தில்தான் பருவகால பழங்கள் காய்கறிகள் முற்றிலும் சுவையாக இருக்கும்.
கொட்டிக் கிடக்கும் பூக்களிலும் இலைகளிலும் பனி விழுவதால் பார்ப்பதற்கு மிக ரம்யமாய் தெரியும் குழந்தைகளுக்கு இந்நாளில் விடுமுறை வருவதால் அவர்களும் இக்காலத்தை விரும்புகின்றனர். இக்காலத்தில் கொய்யா ஆரஞ்சு போன்ற பழங்கள் அதிகம் விளைகின்றன. சில மரங்கள் இலைகளை இழக்கின்றன. ஆனால் அவற்றின் வேர்கள் சுறுசுறுப்பாக இருக்கும். இக்காலத்தில் மக்கள் தன்னை குளிரிலிருந்து ஆடைகள் மூலம் தற்காத்து கொள்கின்றனர். குளிர்கால உடையை அணிவதன் மூலம் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது நெருப்பை மூட்டியும் குளிர் காய்கிறார்கள்.
நல்ல இதமான இந்த குளிர்காலத்தை நாம் வரவேற்று மகிழ்ச்சியுடன் இந்த மாதங்களை ஆனந்தமாக கடப்போம்.
கோவில்களில் நல்ல இனிமையான பஜனைகள் இசைக்கிறார்கள். இதனை அனுபவித்து மகிழ்வோம்.
ஞா. கலைச்செல்வி
சென்னை
add a comment