தமிழகம்

தேசிய மாணவர்படை மாணவர்கள் மலைஏறுதல் பயிற்சி

94views
இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரியில் பயிலும் தேசிய மாணவர் படை மாணவர்கள் ஜெகன் மற்றும் நாகர்ஜுன் ஆகியோர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் 06.10.2024 முதல் 13.10.2024 வரை தேசிய அளவில் நடைபெற்ற மலை ஏறுதல் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். கேரளா மாநிலம், கலமாவு வில் 10.09.2024 முதல் 17.09.2024 வரை நடைபெற்ற மலை ஏறுதல் பயிற்சியில் மாணவி தேசிகா பங்கேற்றார். ஆந்திர மாநிலம், அறக்கவல்லி யில் 04.10.2024 முதல் 11.10.2024 வரை நடைபெற்ற மலை ஏறுதல் பயிற்சியில் மாணவர்கள் முத்துரவி மற்றும் சிவகிருஷ்ணன் ஆகியோரும் மலைஏறுதல் பயிற்சியில் பங்குபெற்றனர். பயிற்சிமுகாமில் பங்குபெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.  கல்லூரி தேசிய மாணவர் படை, ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலிப் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!