52
நெல்லை கவி க.மோகனசுந்தரம்
மௌனம் அதிக ஓசை கொண்ட ஒரு மொழி. அது ஒரு தற்காப்பு ஆயுதம். அது ஒரு புரியாத மொழி. ஆனால் அதன் அர்த்தங்கள் ஆயிரமாயிரம்.
மௌனம் நமக்கு மிகச் சிறந்த காவலன்.
மௌனம் நமது மிகப்பெரிய சக்தி.
அது என்னவென்று பிறருக்கு புரியாத வரையில் நமக்கு அது பலம்.
சில நேரங்களில் மௌனம் கோபத்தை உணர்த்தும்.
சில இடங்களில் அது வலியைக் குறிக்கும்.
பலரால் அது சம்மதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும்.
சிலரால் அது எதிர்ப்பைக் காட்டுவதாக கணிக்கப்படும்.
சில நேரம் ஏமாற்றத்தையும் குறிக்கும்.
அதனால் அது அதைக் கொண்டவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு பாஷை.
சில நேரங்களில் மேற்கொள்ளும் மௌனம் உறவை நீடிக்க செய்யும்.
அதே நேரத்தில் தேவையற்ற நேரத்தில் கடைபிடிக்கும் மௌனம் உறவை துண்டிக்கவும் செய்யும்.
ஆகவே மௌனம் சில சமயங்களில் சாதகம் சில சமயங்களில் பாதகம்.
மௌனம் சில நேரங்களில் வழியைத் தரும்.
சில நேரங்களில் வலியைத் தரும்.
சில நேரங்களில் வெற்றியைத் தரும்.
சில நேரங்களில் தோல்வியைத் தரும்.
ஆகவே தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் தேவையான அளவில் மௌனத்தை பயன்படுத்துங்கள். அதே நேரத்தில் தேவையற்ற மௌனமும் ஆபத்தானதே.
சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுத்து நலமுடன் வாழ்வோம்.
( தொடர்ந்து பயணிப்போம் )
add a comment