தமிழகம்

வேலூர் பாகாயத்தில் 21 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது !

91views
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவுப் படி வேலூர் பாகாயம் காவல்துறையினர் சின்ன அல்லாபுரம் பகுதியில் உள்ள காதரின் பெட்டி கடையில் சந்தேகத்தின் பேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த கடையில்அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களாத ஹான்ஸ், கூல் லிப் என மொத்தம் 21 கிலோ கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.18,566 ஆகும். இது தொடர்பாக தொரப்பாடியை சேர்ந்த முகமது தெளஷாத், சின்ன அல்லாபுரத்தை சேர்ந்த காதர் என 2 பேரை கைது செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!