தொலைக்காட்சி

உச்சகட்ட பரபரப்பில் “கெளரி” – துர்காவை கொன்று நதியில் தூக்கி எறியும் ஆவுடையப்பன்..!

54views
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கெளரி”. இந்த தெய்வீகத் தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது தொடரின் ஓர் மிக முக்கிய பகுதி இந்த வாரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.
பிரிவது, சேர்வது என மாற்றி மாற்றி அவதிப்பட்டுக் கொண்டிருந்த துர்காவை, அசோக் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள, இவர்களுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாறாக அசோக் – துர்கா மீண்டும் இணைந்தால் அது ஆவுடையப்பன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று காலன் எச்சரிக்கிறார். பின்னர் காலனின் அறிவுறுத்தல்படி சாந்தி முகூர்த்தத்தை தடுத்து நிறுத்த ஆவுடையப்பன் தனது சதி வேலைகளை ஆரம்பிக்கிறார். மேலும் துர்காவை கொல்லவும் ஆட்களை அனுப்பி வைக்கிறார்.
ஆனால், அதில் இருந்து துர்கா தப்பிக்க, பின்னர் ஆவுடையப்பனின் குடும்பமே துர்காவை கொல்ல களத்தில் இறங்குகிறார்கள். இறுதியில், அசோக்குக்கு தெரியாமல் துர்காவை கடத்தி கொலை செய்து நதியில் தூக்கி எறிகிறார்கள்.
இத்தகைய இக்கட்டான சூழலில் துர்காவை காப்பாற்ற அம்மன் வருமா? துர்காவின் கதி என்னவாகும்? என்கிற உச்சகட்ட பரபரப்பில் கௌரி மெகா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!