தமிழகம்

தோட்டிக்கோடு ஸ்ரீ மௌனகுரு சாமி கோவிலில் நடைப்பெற்ற வள்ளலார் சிறப்பு பூஜை

287views
கன்னியாகுமரி மாவட்டம் நம்பி மலை, தோட்டிக்கோடு ஸ்ரீ மௌனகுரு சாமி கோவிலில் ஜாதி வேறுபாடு இன்றி சடங்குகளுக்கு, சம்பிரதாயத்திற்கு அப்பால் மனித நேயத்தாலும் ஜீவகாருண்யத்தாலும் இறைவனை அடையலாம் என்ற உன்னத கருத்தை மெய் படுத்திய வள்ளலார் பிறந்த தினத்தை தர்மகர்த்தா அன்னதான வித்தகர் சுகதேவன் சுவாமிகள் ஆசியுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வள்ளலார் பிறந்த தினத்தை ஜீவஜோதி சமூக சேவகர் மருத்துவர்.தி. கோ. நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. இங்கு சுமார் 50- வருடங்களுக்கு மேலாக எல்லா பௌர்ணமி நாட்களிலும் வள்ளலார் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் மதிய உணவு வருவோர் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.

வள்ளலார் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை திருவாளர்கள் மகேஸ்வரன், வேல்முருகன், கோபாலகிருஷ்ணன், ராஜ புகழ் ,மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!