120
நெல்லை கவி க.மோகனசுந்தரம்.
அன்பு நண்பர்களே…
நமது வாழ்க்கையே ஒரு குறிப்பிட்ட காலம் தான்.
காலம் பொன் போன்றது என்பார்கள்.
என்னைப் பொறுத்தவரை பொன்னைக் கூட சற்றுக் கூடுதல் விலை கொடுத்தாவது வாங்கி விடலாம்.
தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால் காலத்தை -இழந்த நேரத்தை ஏன் ஒரு நொடிப் பொழுதை நம்மால் வாங்க முடியுமா?
வாழ்க்கையில் வென்றவர்கள் எல்லாம் நேரத்தை வென்றவர்கள்.
எல்லாம் அவர் நேரம்!… என்று நாம் சுலபமாக கடந்து போகிறோம்.
அந்த நேரத்தில் அவர் எவ்வளவு உழைத்தார் ,என்னென்ன முயற்சி எடுத்தார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க தவறி விடுகிறோம்.
இதுதான் நமது பலவீனம்.
எனக்கு நேரம் சரியில்லை என்று சிலர் சொல்வார்கள்.
ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியான நேரத்தைக் காட்டும் என்பார்கள்.
ஓடாத கடிகாரமே ஒரு நேரத்தை சரியாக காட்டுகிறது என்றால்….
நீங்கள் ஓடிக்கொண்டே இருந்தால்…
சரியில்லாத உங்கள் நேரமும் சரியாகும்.
சரியான வெற்றியைக் கொடுக்கும்.
நீங்கள் வாழ்க்கையில் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உங்கள் முன்னேற்றத்தில் ஒரு பின்னடைவே.
கடிகாரம் பார்ப்பது முயற்சியை ஆரம்பிக்க தானே தவிர…
முயற்சியை நிறுத்த அல்ல.
நமக்காக காலம் என்றும் காத்திருக்காது.
எனவே நேரத்தை நேசியுங்கள். நேரத்தை சேமியுங்கள்.நேரத்தில் கடமையை செய்யுங்கள்… வாழ்க்கையில் உயரிய இடத்திற்கு வாருங்கள்.
( தொடர்ந்து பயணிப்போம்.)
add a comment