தொலைக்காட்சி

“கிளாசிக் திரை”

12views
தமிழ் சினிமாவின் பேசும் படம் தொடங்கி தற்போதைய காலம் வரை எவ்வளவோ படைப்புகள் மனதில் விட்டு நீங்காத இடத்தை பெற்றுள்ளன. தமிழ் திரை உலகின் முதல் இயக்குனர் K.சுப்பிரமணியம் தொடங்கி தற்போது வரை உள்ள இயக்குனர்கள் வரை மறக்க முடியாத படைப்புகளை திரையுலகுக்கு கொடையாக அளித்துள்ளனர் .
இயக்குனர்கள் ட்ரெண்ட் செட்டர்களாக போற்றக்கூடிய இயக்குனர் ஸ்ரீதர், திருலோக சந்தர், பீம்சிங், பந்தலு, A.P. நாகராஜன், இயக்குனர் பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா, மணிரத்தினம், பாலுமகேந்திரா என இந்த பட்டியல் மிக நீண்டது. இவர்களின் படைப்புகளை நாம் திரும்பிப் பார்த்து அதனை ரசிக்க ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது கிளாசிக் திரை நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற திரைப்படங்களை சுருக்கமாக ஒரு தொகுப்பாக வழங்குகிறது. இந்த நிகழ்ச்சி. 1950 களில் தொடங்கி 60, 70 மற்றும் 90களில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களின் முக்கிய காட்சிகளை தொகுத்து ரசிகர்களுக்காக வழங்குகிறது இந்த கிளாசிக் திரை. இந்நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!