79
எண்:184
பாடல்: முஹம்மது மஹ்ரூஃப்
ராகம்: ஒரு நாள் யாரோ
வருவேன் நானே
உம்மைக் காண மதினம்தானே
அண்ணலே கானம்
ரவ்ளாவில் நானும்
நின்றங்கு சொல்வேனே
வருவேன் நானே
உம்மைக் காண மதினம்தானே
சொற்கள் மனதினில் துள்ள
துள்ளும் காதலில்
நானதை அள்ள
சொற்கள் மனதினில் துள்ள
துள்ளும் காதலில்
நானதை அள்ள
அள்ளப் பிறந்தது உவமை
அந்த உவமையில் நிறைந்தது கவிதை
அள்ளப் பிறந்தது உவமை
அந்த உவமையில் நிறைந்தது கவிதை
கவிதையில் உதித்தது ஞானம்
கவிதையில் உதித்தது ஞானம்
இறைஞானமே அவன்
தந்த தானம்
(வருவேன் நானே)
தூக்கம் துரந்தன இமைகள்
நெஞ்சில் சுரந்தன
நபி நினைவலைகள்
தூக்கம் துரந்தன இமைகள்
நெஞ்சில் சுரந்தன
நபி நினைவலைகள்
எண்ணப் பறவைகள் பறக்கும்
என்னில் கற்பனை
கதவுகள் திறக்கும்
எண்ணப் பறவைகள் பறக்கும்
என்னில் கற்பனை
கதவுகள் திறக்கும்
புகழ் பாக்களும்
வெளிவரத் துடிக்கும்
புகழ் பாக்களும்
வெளிவரத் துடிக்கும்
நான் புறப்படும் வரை
அது இருக்கும்
வருவேன் நானே
உம்மைக் காண மதினம்தானே
அண்ணலே கானம்
ரவ்ளாவில் நானும்
நின்றங்கு சொல்வேனே
வருவேன் நானே
உம்மைக் காண மதினம்தானே
add a comment