தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ்நிலையம் அருகே தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்த பக்த ஆஞ்சநேயர் !!

44views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலிப்பார். அதன்படி செப்டம்பர் 1-ம் தேதி ஞாயிற்று கிழமை காலை அபிஷேகம் நடந்தது.  பின்பு தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், வடைமாலை சாத்தப்பட்டும் காலை மற்றும் மாலை, இரவு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு காலை , மாலை , 2 வேளையிலும் பிரசாதம் வழங்கப்பட்டது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!