தமிழகம்

சேவூரில் காட்பாடி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் !

31views
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய ஆலோசனை கூட்டம் காட்பாடி அடுத்த சேவூர் எப்சிஐ எதிரில் உள்ள விநாயகர் கோயிலில் நடைபெற்றது.  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பார்த்தீபன் முன்னிலை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டார்.  விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவது, சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!