தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோயிலில், சீரமைக்கப்படும் சுப்பையார் குளத்தை நகராட்சி மேயர் பார்வையிட்டார்

111views
சுப்பையார் குளம் பாதுகாப்பு இயக்க நிறுவன பொதுச் செயலாளர் தா.ஜோணி அவர்களால் கொடுக்கப்பட்ட மனுவை பரிசீலனை செய்ய நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் ரெ.மகேஷ் அவர்கள் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இஅப , துணை மேயர் திருமதி .மேரி பிரின்சி லதா மற்றும் சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் வருகை தந்து குளத்தைச் சுற்றிப் பார்வையிட்டார்.

சுப்பையார் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசகர் சமூக சேவகர் மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் ஆணையர் பொதுச் செயலாளர் மற்றும் அங்கத்தினர்கள் முன்னிலையில் மேயரிடம் அத்தியாவாசியமாக நல்ல நீர் வரவும் மாசு நீர் மற்றும் உவரி நீர் வெளியில் செல்லவும், ஏற்பாடு செய்யவும் குளத்திற்கு உள்ளே வெளியே உள்ள புதர் புண்டுகளை அகற்றவும், குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்கவும், குப்பைகளை கொட்ட குப்பை தொட்டிகள் அமைக்கவும், ஆபத்தான குளக்கரையில் கதவுகளுடன் கம்பி வேலி அமைக்கவும், குளக்கரையில் அமைந்துள்ள மின்கம்பத்தின் அஸ்திவாரம் பலவீனமாக இருப்பதால் மதில் சுவர் கட்டி பலப்படுத்தவும் சுப்பையார்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்வில் 14-வது வார்டு வட்டப்பிரதிநிதி ராம்குமார் ,14-வது வார்டு மாநகராட்சி உறுப்பினர் திருமதி . கலா ராணி ,துணை செயலாளர் வேல்முருகன்.சி.டி.சுரேஷ், துணைத் தலைவர் மருத்துவர் பெர்லிங்டன், ரத்தினசிகாமணி செயற்குழு நிர்வாகிகள் முருகன் , ஜெயன், கிளமெண்டு, தனுராஜ் , சுரேஷ் மற்றும் பொதுமக்கள் இருந்தனர். அனைத்தும் கேட்டறிந்து ஆய்வு செய்த மேயர் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நிவர்த்தி செய்வதாக வாக்களித்து விடை பெற்றார்.

இதன் எதிரொலியாக மக்கள் தாமாக முன்வந்து இடையூறாக இருந்த பொருட்களை மாற்றி நகராட்சி துறையினருடன் இணைந்து செயல்படுவதை காண முடிகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!