இராமேஸ்வரம் மீனவப் பகுதியில் நலத்திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
68views
இராமேஸ்வரம் மீனவப் பகுதியில் ரூ.2276.93 இலட்சம் மதிப்பீட்டில் 200 மீட்டர் டி.ஜெட்டி மற்றும் 150 மீட்டர் படகு அணையும் தளம் புதிதாக கட்டப்பட்ட பணிகளையும் மற்றும் குந்துகால் பகுதியில் ரூ.400 இலட்சம் மதிப்பீட்டில் மீன் இறங்கும் தளத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சியின் மூலம் மீனவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த நிகழ்வில் இராமநாதபுரம் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ் கனி எம்பி பங்கேற்று படகு அணையும் தளம் பகுதிகளை பார்வையிட்டு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.