தமிழகம்

குமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சி சொத்தவிளை கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

345views
‘நீலத் திரைக் கடலோரத்திலே நின்று நித்தம் தவம் செய் குமரி எல்லை’ வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மாண்டி கிடக்கும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சி சொத்தவிளை கடற்கரையில் தினமும் அதிகாலையில் யோகா பயிற்சி செய்யும் ஸ்காட் கிறிஸ்டியன் பி எட் காலேஜ் முதல்வர் திரு .பிரைட் அவர்கள் குழுவினரோடு யோகா பயிற்சி செய்த நிறைவோடு களப்பணி தொடங்கியது. நடைப்பயிற்சி செய்பவர்களுடன் இணைந்து மக்கா குப்பைகளை அகற்றும் பணியும் பொது மக்களிடையே விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.

கடற்கரையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன . சமூக சேவகர் பசுமை நாயகன் மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் ( சுமார் பத்து லட்சம் மரங்களுக்கு மேலாக நடுவதற்கு காரணமாக இருந்தவரும் ^மரம் நடவே மனம் நாடுதே ^ தலைப்பில் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே வானொலியில் பேட்டி கொடுத்தவரும் கொரோனா காலகட்டத்தில் நேச்சுரல் ஆக்சிஜன் ஜெனரேட்டர் என்று கூறி மரங்கள் நடுவதற்கு காரணமாக இருந்தவரும் நீர் வளங்களிலும் மும்பை, கோவா, சென்னை, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கடலும் கடல் சார்ந்த இடங்களில் இரசாயன கழிவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து பல வருடங்களாக தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தியவர் ) தலைமை தாங்கினார்.

அவர் கூறுகையில், ‘ நமது முன்னோர்கள் வாழ்ந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யும்போது பெருமைக்குரிய தடயங்களும் ஆவணங்களும் கிடைக்கப் பெறுகின்றது. இன்றைய சூழலில் மரம் நடுவதற்கு மண்ணைத் தோண்டும் போது மண்ணை மாசுபடுத்தும் மக்கா கழிவுகளும் கைவிரல்களை கிழிக்கின்ற குப்பித் துண்டுகளையும் காண முடிகிறது இதை ஒருகணம் சிந்திக்கும்போது எனது கைவிரல்கள் கூரிய குப்பித் துண்டுகளுக்கு இரத்ததானம் செய்வதை என்னால் உணர முடிந்தது. என்னால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் பாட்டிலில் உள்ள பானங்களை குடிப்பதற்கு எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. அதோடு நிறுத்தாமல் கண்ணாடி பாட்டிலை ஏதோ ஒரு சிற்றின்பத்திற்காக உடைத்து நொறுக்குவது கடற்கரையில் மண் வீடு கட்டி விளையாடும் சின்னஞ் சிறார்களின் கைகளையும் பதம் பார்க்கும் அல்லவா? ஏன் உங்களையும் பதம் பார்க்க கூடும் அல்லவா? அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? ஏன் வனப்பகுதியில் பொழுதுபோக்கிற்கு சென்று நமது செயலால் பிறரின் பொழுதையெல்லாம் காயத்தோடு கழிக்க வேண்டிய சூழ்நிலையை தருகிறோம் ( சர்க்கரை வியாதி வியாதிஸ்தர்கள் வயோதிகர்கள் ) ஏன் மலைகளில் குப்பிகளை நொறுக்குவதால் பெரிய யானைகள் முதல் அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு உண்டாகும் அல்லவா? விவசாய நிலங்களில் குப்பித்துண்டுகளால் விவசாயின் கால்கள் பதம் பார்க்கப்படும் அல்லவா? எனவே நாம் பெற்ற சுதந்திரத்தை பேணுவது என்பது நம்மை சார்ந்தோரையும் பிற உயிரினங்களையும் வாழ வகை செய்வது அன்றோ? கற்போம் கற்போம் மனித நேயத்தை பாதுகாக்க கற்போம், கற்போம் கற்போம் இயற்கையை பாதுகாக்க கற்போம், கற்போம் கற்போம் தனிமனித ஒழுக்கத்தை மேம்படுத்த கற்போம், கற்போம் கற்போம் உலக ஒற்றுமையை பாதுகாக்க கற்போம். காக்கை குருவி எங்கள் ஜாதி -நீள் கடலும், மலையும் எங்கள் கூட்டம், நோக்கம் திசையெல்லாம் நாமின்றி வேறில்லை? நோக்க நோக்கக்க களியாட்டம்- என்ற கவிதைக்கு ஏற்ப நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற திரும்ப பெற முடியாத செல்வங்களை நம் சந்ததியர்களுக்கும் விட்டு செல்வோமாக’ என்று கூறினார் .

சிறப்பு விருந்தினராக சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவப் பேராசிரியர் குழந்தை நல மருத்துவர் சோமசேகர் கலந்து கொண்டார். அவருக்கு ஒருங்கிணைப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேலாளர் திரு. காசிநாதன், முன்னாள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதன்மை மேலாளர் திரு . மோகன், வடக்கன்குளம் எஸ் ஏ ராஜா பாலிடெக்னிக் முன்னாள் முதல்வர் திரு ராஜேந்திரன், திரு ராஜேஷ் மற்றும் மற்றும் திரு ரோகின்ஸ் ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
அனைவரும் காலை சிற்றுண்டி உண்டு பணி செய்த நிறைவோடு விடை பெற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!