தமிழகம்

ஆரல்வாய் மொழியில் 78- வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்

107views
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி எய்ம்ஸ் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற 78- வது சுதந்திர தின விழா ஆரல்வாய்மொழி அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து மேலாண்மை அறங்காவலர்  சமூக சேவகர் *டி. ஜோணி தலைமையில் நடைபெற்றது.  சுதந்திர போராட்ட தியாகியின் வாரிசும் மருத்துவருமான தி. கோ. நாகேந்திரன் சமூக சேவகர்,  தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார்.
சுதந்திர தின விழாவில் கற்போம் கற்போம் மனிதநேயத்தை பாதுகாக்க கற்போம் , கற்போம் கற்போம் தாய் திருநாட்டை பாதுகாக்க கற்போம் , கற்போம் கற்போம் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கற்போம் , கற்போம் கற்போம் நம் சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் வீரர்களையும் போற்றக் கற்போம், கற்போம் கற்போம் உலக ஒற்றுமையை பாதுகாக்க கற்போம் என உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழரசி, பிரின்சியா, அபின்ஸி ஆகியோர் செய்திருந்தனர் .அனைத்து பணியாளர்களும் மாணவியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தார்கள். தேசிய கீதத்துடன் விழா முடிவடைந்தது.விழா முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!