தமிழகம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை வைத்த மஜக மாநிலதுணைச் செயலாளர் சைபுல்லாஹ்

47views
ஆகஸ்ட்-10
சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் ஆஷா அஜீத் அவர்களையும் காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஷ் அவர்களையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ் அவர்கள் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தார்.
1.இளையான்குடி மகளிர் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் பள்ளியின் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்று சுவர் எழுப்ப வேண்டும்.
2.உயர்நிலை பள்ளியின் தொடக்கம் 1961 லிருந்து 1986 வரை அரசு சார்பில்லாமல் இயங்கி வந்ததை 1986 ல் தமிழக அரசிடம் ஒப்படைத்த கல்வியாளரும் தனவந்தருமான திரு தென்மலைக்கான் டிரஸ்டின் தலைவர் பரிஸ்டா அவர்கள் மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக மிகவும் கவனம் செலுத்துகிறார் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
3.உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதன் மூலம் இளையான்குடியில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் மருத்துவ கல்விக்கான 7.5% இட ஒதுக்கீடு பயனடைய முடியும்.
4.மேலும் இப்பள்ளியை 25 வருடம் அரசு சாராமல் நிர்வகித்து வந்ததன் அடிப்படையிலும் ஏற்கனவே இப்பள்ளிக்கு சூட்டப்பட்டிருந்த தென்மலைக்கான் பெயரை சூட்ட வேண்டுமெனவும் கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
5.இளையான்குடியில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவ மனையில் 6 மருத்துவர்கள் 12 செவிலியர்கள் 2 துப்புரவு பணியாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் 3 மருத்துவர்கள் 3 செவிலியர்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். அரசு கவனத்தில் கொண்டு அதிகப்படியான மருத்துவர்களும் செவிலியர்களும் துப்புரவு பணியாளர்களும் இடம்பெற வேண்டுமென இம்மனுவில் கோரிக்கை வைக்கப்படுகிறது.
6.இளையான்குடியின் கடைத்தெருவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சேர் ஆட்டோ சாலைகளில் குறுக்கு நெடுக்குமாக இருப்பதை போக்குவரத்து போலிஸார் சரி செய்து பணி தொய்வில்லாமல் நடைபெற வேண்டுமென காவல் கண்காணிப்பாளருக்கு மனுவில் கோரிக்கை வைக்கப் பட்டது.
இந்நிகழ்வில் இளையான்குடி நகர பொருளாளர் உஸ்மான், உமர் உடனிருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!