தமிழகம்

பொட்டலூரணியில் மீன்கழிவுகளை ஏற்றிச்சென்ற வாகனம் பொதுமக்களால் சிறைவைப்பு : மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி கோட்டாட்சியர், திருவைகுண்டம் வாட்டாச்சியர் ஆகியோருக்கு தனித் தனியாக போராட்டக்குழு கடிதம்

51views
தூத்துக்குடி மாவட்டடத்தில் இருக்கிறது பொட்டலூரணி. இங்கு ஆயிரத்து அறுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்த கிரமத்தை ஒட்டி மூன்று மீன்கழிவு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் புகை, மீன் கழிவுகள் விளைநிலங்களை பாதிப்பதோடு மட்டும் அல்லாமல், டேங்கர் லாரிகள் வழியாக கழிவுநீரை ஒதுக்குப்புறங்களில் கொட்டிவிட்டு விட்டு செல்வது என நடைபெறும் தொடர் செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது இக் கிராமம்.
கிராமம் தன் வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டிருக்கிறது. விவசாயம் முற்றிலும் முடங்கி விட்டிருக்கிறது.
ஆஸ்த்துமா மற்றும் நுரையீரல் நோய்களால் மக்கள் பெரும்பாலான இங்கு பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆளும் கட்சிக்கு எதிராக வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுக்கு அரசுத்தரப்பில் எந்தவித தீர்வும் இன்றுவரை கொடுக்கப்படவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கழிவுமீன் நிறுவனங்களை உடனடியாக மூடும் படியும் பொதுமக்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்குகளை நிபந்தனையின்றி உடனடியாக திரும்பப் பெறக்கோரியும் இந் நிறுவனங்களுக்கு எதிரான இந்த போராட்டத்தை மக்கள் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக கையில் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இந்த கிராமத்தின் வழியாக மீன்கழிவு நிறுவனத்தில் இருந்து கழிவுகளை ஏற்றிக்கொண்டு வெளியேறிய வாகனம் ஒன்றை பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறைப் பிடித்த்துள்ளனர்.

பொட்டலூரணி மக்கள் மீது வன்முறை நிகழ்த்தும் நோக்கில் காவல்துறையினர் நேற்று இரவு கடுமையாக நடந்துக் கொண்டதாக மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி கோட்டாட்சியர், திருவைகுண்டம் வாட்டாச்சியர் ஆகியோருக்கு தனித் தனியாக கடிதம் கொடுத்திருப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
நாள்தோறும் ஏதோ பிரச்னை ஏதோ ஒரு விதத்தில் தங்களை அச்சுறுத்துவதாக பெண்களும் வயதானவர்களும் கலங்கி இருக்கின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!