தமிழகம்

வேலூர் ஶ்ரீபுரம் நாராயணி நர்சிங் கல்லூரி மாணவ – மாணவிகள் 380 பேருக்கு பட்டங்களை வழங்கிய திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் !!

34views
வேலூர்அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா அங்குள்ள நாராயணி திருமண மண்டபத்தில் நடந்தது. நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி தலைமை தாங்கினார் மருத்துவமனை கண்காணிப்பாளர் கீதா கல்லூரி நிர்வாக அலுவலர் மாதவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்சுமார் 380 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது நாம் எந்த வேலை செய்தாலும் கடமைக்காக செய்யக்கூடாது மனப்பூர்வமாக செய்ய வேண்டும்,எனக்கு சரியாக படிப்பு வராத காரணத்தினால் கல்லூரியில் படித்து பட்டம் பெற முடியவில்லை இந்த பட்ட மொழிக்கு விழாவில் கலந்து கொள்ளும்போது பட்டம் நாம் வாங்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.
நர்சுகள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் டாக்டர்கள் மூளை என்றால் நர்சுகள் இதயம் போன்றவர்கள் நான் இதை சொல்ல காரணம் எனது தாயும் நர்ஸ் தான். முன்னதாக கல்லூரி முதல்வர் பிரபா அனைவரையும் வரவேற்றார். சக்தி அம்மா இன்ஸ்டிடியூட் ஆப் அலைட் ஹெல்த் சயின்ஸ் முதல்வர் ஆனந் மகராஜன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!