தமிழகம்

உற்சாகமாக நடைபெற்ற மாவட்டசெயலாளர்கள் கூட்டம்!

46views
ஜூலை.12.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் ஏற்காட்டில் Friday inn விடுதியில் எழுச்சியாக நடைபெற்றது.
இந்நிகழ்வை முன்னிட்டு முதல் நாள் இரவே மாவட்ட செயலாளர்கள் தங்குவதற்கான விரிவான வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
இதனால் மாவட்டச் செயலாளர்கள் மலையடிவார மகிழ்ச்சி மற்றும் அமைதியான சூழலை அனுபவிக்கும் நோக்கோடு முதல் நாள் இரவிலேயே ஏற்காட்டிற்கு வருகை தந்தனர்.
முன்னதாக சேலம் மாவட்ட மஜக சார்பில் சேலத்தில் இருந்து ஏற்காடு வரை பதாகைகளும், கொடிகளும் வைக்கப்பட்டு வரவேற்பு வழங்கப்பட்டது.
சேலம் நகரில் மஜக-வின் பேனர்களும், சுவரொட்டிகளும் பரவலாக வைக்கப்பட்டிருந்தன.
இதமான குளிருடன், உற்சாகமான சூழலில் காலை 11:00 மணிக்கு மாவட்ட செயலாளர்களுடைய ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்தின் செயல்பாடுகள் அடங்கிய ஆவண பதிவேடுகளை மாவட்ட செயலாளர்கள் மேலிட பொறுப்பாளர்களிடம் வழங்கினர்.
நிகழ்வில் தொடக்கமாக பொருளாளர் J.S.ரிஃபாயி வரவேற்புரை ஆற்றினார்.
அதன் பிறகு மன்னர் பகதுர்ஷாவின் நினைவு நாளை முன்னிட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
அனைவரும் எழுந்து நின்று ஐந்து நிமிடங்கள் பகதூர்ஷா மற்றும் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவுகளை வீரமுழக்கமாக எழுப்பி மரியாதை செய்தனர்.
அதன் பிறகு தலைவர் அவர்கள் கருத்தாய்வை நடத்தினார்.
ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் கட்சி வளர்ச்சி குறித்து தங்களுடைய கருத்துக்களை கூறினர் .
மேலும் அவரவர் மாவட்டத்துடைய பலம், பலகீனம், செயல்பாடுகள் குறித்தும் விரிவாக பேசினர்.
குறுக்கீடுகள் இன்றி முழுமையாக அவர்கள் அனைவரும் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
மதியம் 2 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டது.
வெளியே புல் வெளி வளாகத்தில் விருந்தோம்பல் நடத்தப்பட்டது.
அப்போது சேலம் மற்றும் ஏற்காட்டை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விருந்தோம்பலில் பங்கேற்றனர்.
மீண்டும் இரண்டாவது அமர்வு 3.30 மணிக்கு தொடங்கியது.

A, B, C, D என வகைப்படுத்தப்பட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, செயல்திட்டங்களும் வழங்கப்பட்டது.
மண்டல வாரியான அரசியல் பயிலரங்குகள், மாவட்ட பொதுக் குழுக்கள், பேச்சாளர் பயிற்சி முகாம்கள் குறித்தும் திட்டமிடப்பட்டது.
பிறகு மேலிட பொறுப்பாளர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து மாநில அணிகளின் செயலாளர்கள் தங்களுடைய செயல் திட்டங்கள் குறித்தும் விவரித்தனர்.
அதன் பிறகு தலைமையின் சார்பிலான வழிகாட்டல்களும், வளர்ச்சித் திட்டங்களுக்கான குறிப்புகளும் வழங்கப்பட்டது .
பிறகு பொதுச் செயலாளர் M. முகம்மது நாசர் தீர்மானங்களை வாசித்தார் .
அதன் பிறகு இணைப் பொது செயலாளர் கேப்டன் சையது அஹமது ஃபாருக் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் மாலை 6:00 மணி அளவில் நிறைவுற்றது.
எல்லோருக்கும் பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டதுடன் ஒவ்வொருவரின் கருத்துகளும் குறுக்கீடுகள் இன்றி அனுமதிக்கப்பட்டு அவை ஆய்வு குறிப்புக்கு உட்படுத்தப்பட்டு முழுமையான கருத்தாய்வு நடத்தப்பட்டதால் மாவட்ட செயலாளரும் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
கட்சியின் வளர்ச்சிக்கான மஜக 2.0 செயல் திட்டத்தை பெற்ற உற்சாகத்துடன் அனைவரும் புறப்பட்டனர்.
இதில் துணைத் தலைவர் மன்னை. செல்லச்சாமி, துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் ஆகியோரும், மாநிலச் செயலாளர்கள் , மாநிலத்துணைச் செயலாளர்கள், அணிகளின் மாநில தலைவர், செயலாளர்கள் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!