தமிழகம்

வேலூர் சிப்பாய் புரட்சியின் 218 -வது தினம் ! நினைவு சின்னத்திற்கு மரியாதை !!

57views
வேலூர் கோட்டையில் தான் 1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி தான் இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை ஏற்படுத்தினர். இதுவே இந்திய சுதந்திரப் போருக்கு வித்திட்டது.  இதில் ஆங்கிலேய சிப்பாய்கள். இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.  இதுவே இந்தியாவின் சுதந்திர தாகத்திற்கு மூலக் காரணமாக இருந்தது.  இதை நினைவு கூற வேலூர் மக்கான் பகுதியில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.
அதற்கு புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, எஸ். பி. மணிவண்ணன், முப்படை முன்னாள் வீரர்கள்,எம் எல் ஏ, மேயர், துணை மேயர் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!