கட்டுரை

மனித சக்திக்கு அப்பால், சிறந்த அற்புத சக்திகளின் மூலம் தனது 101 வது உலக சாதனையைப் படைத்த மாணவி DR.K.பிரிஷா பற்றிய ஒரு செய்தி தொகுப்பு

106views
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகேயன், வழக்கறிஞர் தேவிப்பிரியாவின் மகள் பிரிஷா. 14 வயதாகும் இவர் மீனா சங்கர் வித்யாலயாவில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஒரு வயதிலிருந்து தன் தாயிடமிருந்தும் மற்றும் பாட்டியிடமிருந்தும், யோகாசனங்கள் மற்றும் பிராணாயாமம் கற்று வருகிறார்.
பெற்றோர்களின் ஊக்கத்தாலும், தனது முயற்சி, பயிற்சியினாலும் இதுவரை 101 உலக சாதனைகள் படைத்துள்ளார். 200 க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்கள், 100 க்கும் மேற்பட்ட கோப்பைகள், 100 க்கும் மேற்பட்ட கேடயங்கள், 300 க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், மற்றும் 100 க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்று, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகிறார்.

உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனைகளை யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களை கட்டிக் கொண்டும், ஸ்கேட்டிங், ஹீவர் போர்டு போன்றவற்றிலும், கணக்கு, பௌதிகம், இராசயனம் போன்றவற்றிலும் தனது திறமையினால் பல சாதனைகள் படைத்துள்ளார். இதற்கான சான்றிதழ் குளோபல் யுனிவர்சிட்டி u.S.A. வழங்கி உள்ளது. உலகிலேயே இளம் வயதில் 3 முனைவர் பட்டங்களை முதன் முதலாக பெற்றவர் பிரிஷா.

கண் பார்வை குறைபாடு உடையவர்களுக்கான இளம் வயது யோகா ஆசிரியர் சான்றிதழை NCPCR மத்திய அரசு வழங்கி உள்ளது. 2022-ம் ஆண்டு சர்வதேச அளவில் 68 நாடுகளில் இருந்து பிரிஷாவை குழந்தை மேதையாக தேர்ந்தெடுத்து துபாயில் சான்றிதழ் அளித்து கௌரவித்தனர். மலேசியா, தாய்லாந்து நாடுகளில் நடைபெற்ற சர்வதேச யோகாசனப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், தங்கங்கள் வென்று, கோப்பைகளை கைப்பற்றி, உலக சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மலேசியாவில் லிட்டில் யோகா ஸ்டார்’ அளித்து கௌரவித்தனர். உலகின் சிறந்த ரோல் மாடல், இளம் சாதனையாளர் 2017, 2018, 2019, 2020, 2021, 2022 சக்சஸ்விருது , ஸ்டார் ஆப் நெல்லை2020, அன்னை தெரசா விருது, அப்துல் கலாம் விருது, பாரதி கண்ட புதுமை பெண் விருது, யோகா ராணி, யோக கலா, யோக ஸ்ரீ, ஆசனாஸ்ரீ, யோக ரத்னா, இளம் சாதனையாளர், லிட்டில் சாம்பியன், யங் அச்சீவர் அவார்டு, அமைதிக்கான விருதுகள், சாதனையாளர் விருதுகள், உ மன் பிரிமியம் அவார்டு, ஒன்டர் உமன் அவார்டு 2022, பல்வேறு நிறுவனங்களில் இருந்து எக்செலன்ஸ் அவார்கள், பல்வேறு ரோட்டரி சங்கங்கள் விருதுகள் வழங்கி பிரிஷாவை பாராட்டி கௌரவித்துள்ளார்கள்.

பல்வேறு பல்கலைக் கழங்களும் பிரிஷாவை அழைத்து கௌரவித்துள்ளார்கள். ஹெலத் இன்புளு
யன்சர் அவார்டு, குளோரி ஆப் ஏசியா போன்ற விருதுகளையும் பெற்றுள்ளோர். தன்னைப் போலவே மற்றவர்களும் சாதிக்க வேண்டும் என்ற நேக்கத்துடன் ஏழை மாணவர்கள் மற்றும் பார்வையற்றோர் பள்ளியிலும் வகுப்பு எடுத்து தன்னுடைய பார்வை யற்ற மாணவர் கணேஷ் குமாரை யோகாசனம் புரிய வைத்து, முந்தய உலகசாதனையை முறியடித்துள்ளார்.
முதியோர்கள், காவல் துறை அதிகாரிகள், எய்ட்ஸ் விடுதி, N.C.c. மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கடந்த 7 வருடங்களாக இலவசமாக யோகா வகுப்புகள் எடுத்து வருகிறார். கொரோனா காலங்களிலும் ஆண்லைன் வகுப்பு எடுத்து யோகாசனங்கள், மூச்சி பயிற்சியை பலருக்கும் கற்றுக் கொடுத்து, உதவி செய்து, பலருடைய வாழ்வை காத்து உள்ளார். நேஷனல் யூத் பெஸ்டிவல் 2020, மத்திய அரசின் யோகா போட்டியில் நடுவராக பங்கேற்றுள்ளார்.  திருநெல்வேலியில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா இளையோர் அமைப்பு சார்பில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் பிரிஷாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்து கௌரவப் படுத்தியுள்ளனர்.
மாணவர்கள்,IAS மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளில் பிரிஷாவைப் பற்றி படிப்பது குறிப்பிடத் தக்கது, மேலும், யோகா இன்றே செய்வோம், இன்பம் பெறுவோம்.” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளார்.

யோகாசனங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தி உள்ளார். கிராஸ் பௌவ் ஷீட்டிங்கில் தேசிய அளவில் தங்கம் வென்றுள்ளார். கராத்தேயில் ப்ளூ பெல்ட் பெற்று, அகில இந்தியா கரரத்தே போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இவர் டென்னிஸ், பூப்பந்து, ஸ்கேட்டிங், கீ போர்டு, டிரம்ஸ், கித்தார், ரூபிக்ஸ்க்யூப், இசை, நடனம், ஓவியம், ஒரே நேரத்தில் இரு கைகளை உபயோகப்படுத்தி எழுதுவது, செஸ், ஹீவர் போர்டு, இரு சக்கர வாகனங்களில், கண்களை கட்டிக்கொண்டு ஓட்டுவது, சிலம்பம் சமையல் மற்றும் பல திறமைகளையும் கொண்டு உள்ளார்.
கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்குகிறார். இப்படி ஏராளமான சாதனைகளைத் தாண்டி பிரிஷா
அடுத்தவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை உணர்தல் கண்களால் பார்த்து உடலில் உள்ள நோய்களை கண்டறிதல், கண்களால் பார்த்து ஸ்பூனை வளைப்பது, நடக்கப் போகும் நிகழ்வுகளை, முன் கூட்டியே கணிப்பதும், இது போன்ற திறமைகளை யோகா மற்றும் கியானத்தின் மூலம் பெற்று உள்ளார்.
பிரிஷாவுக்கு 14வது வயதில் யோகா ஆச்சார்யா விருதை மத்திய அரசு ஆயுஷ் வழங்கி கௌரவித்துள்ளது. உலகின் இளம் வயதில் யோகா ஆச்சார்யா” விருது பெற்றவர் பிரிஷாதான். 2024 ஜூலை 21 அன்று மலேசியாவில் சர்வதேச யோகா தினத்தன்று இந்திய ஹை கமிஷ்னர் தலைமையில் பத்துமலையில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் பிரிஷாவும் கலந்து கொண்டு, இந்திய ஹை கமிஷனரிம் வாழ்த்தும் பெற்றார்.
“உலகில் தனித்த அற்புத சக்தியுடைய இளம் வயது பெண் (மெட்டா ஹூமன்) என்ற சான்றிதழை குளோபல் யோகா வெல்நஸ் சம்மித் 2024, மலேசியாவில் 22 ஜுன் அன்று யோகா ஆச்சார்யா DR. K. பிரிஷாவுக்கு வழங்கப்பட்டது. * பார்வை குறைபாடு உடையவர்களின் உலகின் சிறந்த யோகா குரு” என்ற சான்றிதழையும் வழங்கி, பிரிஷாவை பெருமைபடுத்தி கௌரவித்தனர்.
பிரிஷா கண்களை கட்டிக்கொண்டு தன்னுடைய 101 வது உலக சாதனையை மலேசியாவில் நடத்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!