தமிழகம்

IUML ராஜ்யசபா உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் அவர்களுக்கு சென்னையில் வரவேற்பு

35views
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா ) உறுப்பினராக புதிதாக தேர்வு பெற்றுள்ள IUML தேசிய லாயர்ஸ் போரம் அமைப்பாளரும், டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜனாப் ஹாரிஸ் பீரான் அவர்கள் 25.6.2024 அன்று சென்னை வருகை தர உள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை (25.06.2024) அஸர் தொழுகையை முடித்தவுடன் மாலை 5 மணி அளவில் சென்னை காயிதே மில்லத் சாலையில் உள்ள வாலாஜா பள்ளிவாசலில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலத்தில் ஜியாரத் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றார்
அங்கு தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ExMP அவர்களின் தலைமையில் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் MP அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகின்றது
இந்நிகழ்வில் IUML மாநில நிர்வாகிகள், சென்னை (வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு) செங்கல்பட்டு ( வடக்கு, தெற்கு ) காஞ்சிபுரம், திருவள்ளூர் (மேற்கு, கிழக்கு) ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளும் அணிகளின் பொறுப்பாளர்களும் திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
(ஒப்பம்)
கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் Ex MLA
மாநில பொதுச் செயலாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!