தமிழகம்

முதுகலை நீட் தேர்வை திடீரென ஒத்திவைத்து தேர்வு எழுதுபவர்களை பெரும் சிரமத்திற்கு உட்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு. முறையற்ற நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்வதே அனைத்திற்குமான முழுமையான தீர்வு. நவாஸ் கனி எம்பி கண்டனம்.

67views
முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென அதனை ரத்து செய்து தேர்வு எழுதுபவர்களை கடும் சிரமத்திற்கு உட்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அடுத்தடுத்து வெளியானதை அடுத்து இந்த முடிவை ஒன்றிய அரசு எடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திடீரென தேர்வை ரத்து செய்ததால் பல்வேறு இடங்களில் இருந்து தேர்வு நடக்கும் பகுதிகளுக்கு வந்த தேர்வாளர்கள் வெளியூர்களில் பணிகளிலும், இதர தேவைகளுக்காகவும் இருந்தவர்கள் நீட் தேர்வுக்காக தேர்வு மையம் இருக்கும் பகுதிகளுக்கு பயணித்து வந்தவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
தெளிவற்ற முறையில் நடத்தப்படக்கூடிய நீட் தேர்வு முற்றிலுமாக அகற்றுவது தான் அனைவருக்கும் சிறந்தது.
இளநிலை நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள், முதுநிலை நீட் தேர்வு திடீரென தள்ளிவைப்பு என தொடர்ந்து மாணவர்களை சிரமத்திற்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து மாணவர்களின் நலனை காக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!