கட்டுரை

“தமிழர் சாதியை ஒழிக்க நீதியரசர் சந்துரு அவர்கள் அளித்துள்ள அறிக்கையை கைவிட வேண்டும் . அது தமிழ்நாட்டு மக்களை ஏதுமற்றவர்களாக்கி விட முனைவதை விட்டு, சட்டநாதன் குழு அறிக்கையை கையிலெடுக்க வேண்டும்.” தமிழர் தன்னுரிமை கட்சித் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் அறிக்கை.

92views
சாதியை விட.. அதை தவிர்ப்பது மிக கேடு செய்துவிடும். அறிக! யாருக்கும் எந்த வித உதவியும் கிடைக்காது. ஊழல் செய்பவர்களே மிகுந்த பயனடைவர். எந்த சாதியினரும் தங்கள் சாதியில் உள்ள ஏழையரை பற்றி எந்த குரலும் ஒலிக்க முடியாது. இது மக்களுக்கு ஏதும் செய்ய நினைக்காத போலி அரசியலுக்கு துணை போகும் செயல். இதனை குப்பையில் போட்டு விட்டு அரசு சட்டநாதன் குழு அறிக்கையை கையில் எடுக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தையும் அடைய முடியாமல் தவிக்கும் ஏழைகளுக்கும் அரசு இயன்றதை செய்யத் தூண்டும்.
தங்களின் சாதிகளை சொல்லிமல் எழூந்த திரு பச்சையப்ப முதலியார், அரசர் அண்ணாமலை செட்டியார், செங்கல்வராய நாயகர், செ நா தெய்வநாயகம் பிள்ளை அயோத்திதாசபண்டிதர் போன்ற எண்ணற்ற பெரியோர்கள் செயுத அறத் தொண்டுகளை எல்லாம் மறந்து, அப்பெரியோர்களால் படித்து முன்னேறிய தமிழ்நாட்டு மக்கள் எத்தனை எத்தனை இலட்சம், கோடிகள் என்பதையெல்லாம் சொல்ல மறந்த நீதியரசர் சந்துரு அவர்களின் அறிக்கை எமக்கு பெரும் வருத்தமும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
சாதி பெயரை அழிக்க வேண்டும் என எழுந்த தமிழர்கள் ஏராளம். ஏனென்றால்? அது தன்னை உயர்த்திக்கொள்ள பிற சாதியினரை தாழ்த்திவிடுகிறதே என்பதை அறிந்த தமிழ்க்குலத்தால் முன்னெடுக்கப்பட்டதே. சாதி மறுப்பு என்பதும் ஒழிப்பு என்பதும் நம்மூன்னோரின் பகுத்தறிவு. அதை வைத்து பிழை செய்து அரசின் வரவு செலவு திட்டங்களை சோறாக்கி போடுவதோடு நிறுத்திக் கொண்டு சாதியை மறைப்பது ஏழை எளிய மக்களுக்கு உதவ எந்த அடையாளமும் இல்லாமல் செய்துவிடும்.
அது போலவே உழைக்கும் மக்களுக்கும் படித்த அறிவாளர்களுக்கும் அரசில் ஆட்சியில் பங்கெடுக்கும் *தமிழக சட்டமன்ற மேலவையை” மீண்டும் கொண்டுவர வேண்டும்.
அதனால் அரசுகள் தன் போக்கில் மக்களுக்கு கொண்டு வரும் நலம் பயக்காத திட்டங்களை ஒதுக்கவும் நன்மை விளைவிக்கும் வகையில் மாற்றம் செய்யவும் இயலும்.
மொத்தத்தில் மேனாள் நீதியரசர் சந்துரு அவர்கள் குழுவால் வழங்கப்பட்டுள்ள அறிக்கை என்பது மக்களின் உரிமைகளை முடமாக்குவதோடு அவர்களிடம் இருக்கும் தார்மீக உணர்வுகளையும் பாழ்படுத்தி ஒரு அறியாமைத்தனத்தை புகுத்தி விடும்.
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லைகள் உள்ளதைப் போல அரசியல்வாதிகளும் எல்லா பதவி சுகங்களையும் எல்லா தட்டு மக்களுக்கும் பகிர்ந்தளிக்க கற்றுக் கொள்ள புதுப்புது நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொருவராக மாற்றி, முதல்வர், எதிர் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்ட மன்ற, பாராளுமன்றத் தலைவர்கள், உறுப்பனர்கள் என பலருக்கும் பங்கெடுத்து வழிநடத்த வாய்ப்பளிக்க.. நாடும் மக்களும் உயரிடத்தில் இருக்க.. ஏற்றத்தாழ்வுகள் மறைந்து போகும்.
இவற்றை யெல்லாம் விட்டு விட்டு இலையை பறிக்கின்றேன் என்று வேர்களை பிடுங்க குழு அமைப்பதும் வேடிக்கைந் தனமாக்கி மக்களினம் தான் பெற்ற பட்டறிவையும் கல்வியையும் இழந்து வெற்றுத் தனமாக்கி பிற இனங்களிடம் கையேந்த வைத்து விடும் என்பதையும் ஆளுவோரும் மக்களும் நீதி அரசர்களும் உணர வேண்டும்.
நம் மக்கள் நீர், நில, கடல், வளங்களோடும் தொழில், கலை இசை கலைகளோடும் ஆன்மீகம் என இயற்கைகளோடும் அறிவியல் ஆற்றல் என முனைப்போடும் செல்வ சிறப்புகளோடும் வாழ வேண்டும் என்றால்.. அவற்றை எல்லாம் விற்றுப் பிழைக்கும் அரசுகளால் அரசியலாக இல்லாமல் எல்லா வற்றையும் காத்து வளர்த்தெடுக்க கூடியதாகவே எந்த ஒரு செயலும் கருத்தும் இருக்க வேண்டும். அது தவிர வேறு எல்லாம் தமிழு நாட்டு மக்களின் வளர்ச்சியை பாழ்படுத்தி கீழாக்கி விடும் என்பதை ஏற்று தமிழ்நாட்டு அரசு செயல்பட வேண்டும் என தமிழர் தன்னுரிமை கட்சி சார்பிலும் தமிழ்த்தேசிய அரசியல் கூட்டமைப்பின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.
அரசியல் உண்மையான அறச்செயலாக மாற வேண்டும்! தமிழர் என்ற அளவுகோலை நம் அடையாளங்களை இழக்காமல் ஒன்றுபடுத்த பாடுபடுவோம்!
வாழ்க தமிழ்க்குடிகள்!
இப்படிக்கு
பாவலர் மு இராமச்சந்திரன்,
தலைவர் தமிழர் தன்னுரிமை கட்சி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!