தமிழகம்

47 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலம் மாயம்: மக்கள் உரிமை இயக்கத் தலைவர் சிவனடியார் கோபால் குற்றச்சாட்டு

108views
தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் காணாமல் போயுள்ளது. இதனை தமிழக அரசு மீட்க வேண்டும்,’
அரசின் கையில் தமிழக கோயில்கள் இருப்பதால், அவை அழிந்து வருகின்றன. உண்டியல், இதர வருவாய் உள்ள கோயில்களை மட்டுமே அரசு பராமரிக்கிறது. இன்றுவரை 10 ஆயிரம் கோயில்கள் இடிபாடுடன் கிடக்கின்றன. இந்த அரசு ஹிந்து கோயில்களை மட்டுமே கண்டுகொள்வதில்லை.அதே நேரம் பிற மதக்கோயில்கள் அழிய அனுமதிப்பார்களா? சிவகங்கை கவுரி விநாயகர் கோயில் நிலம் 142 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆனால், 9.58 ஏக்கரை மட்டுமே மீட்டு, அனைத்து ஆக்கிரமிப்பையும் அகற்றி விட்டதுபோல், தி.மு.க., அரசு நாடகம் ஆடுகின்றது.
கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்ற குழு சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு விடுத்துள்ள உத்தரவில் கோயில் நிலங்களை மீட்க மாவட்ட வாரியாக 5 பேர் குழு அமைக்க கூறியது. ஆனால், அது குறித்து அரசிடம் எந்த நடவடிக்கையும் இல்லை. அறநிலையத் துறையின் கீழ் 4 லட்சத்து 78 ஆயிரத்து 239 ஏக்கர் கோயில் நிலங்கள் உள்ளன. ஆனால் இத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!