தமிழகம்

மக்கள் விரோத CAA சட்டத்தை ரத்து செய்யக்கோரியும்,Electroal Bond மோசடி,EVM தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்பன குறித்து மக்கள் உரிமை இயக்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு

138views
வருகின்ற 20.03.2024 அன்று காலை 11 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் உரிமை இயக்கம் அறக்கட்டளை சார்பில் மக்கள் விரோத CAA சட்டத்தை ரத்து செய்யக்கோரியும்,Electoral Bond மூலம் பாஜகவிற்கு முறைகேடாக நன்கொடை என்கிற பெயரில் லஞ்சம் கொடுத்த அணைத்து நபர்களின் பெயர்களை SBI வெளியிட வேண்டும் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.
கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிய மோடி அவர்கள் electotal bond கொண்டு வந்த பிறகு யார் யாருக்கு நன்கொடை அளித்தார்கள் என்கிற தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறுவதும் அதை மூடி மறைக்க சதி செய்வதும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மறைமுகமாக மிரட்டல் விடுப்பதும் கண்டிக்கதக்கது.
Electoral Bond மூலமாக ஆதாயம் அடைந்த கம்பெனிகள் எவை எவை அவர்களிடம் ED விசாரனை எப்போது என்பன விவரங்களையும் அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் மேலும் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியும் வலியுறுத்துகிறோம்.
EVM தேர்தலை ரத்து பழைய வாக்குசீட்டு முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வரவேண்டும் கடந்த 2019 தேர்தலில் பாஜகவும் தேர்தல் கமிஷனும் கூட்டாக சேர்ந்து கொண்டு தேர்தலில் முறைகேடாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது வாக்காளர்கள் பெற்ற வாக்குகள் வாக்காளர் எண்ணிக்கையை விட அதுகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டவுடனே தேர்தல் ஆணையம் முடிவுகளை இணைய தளத்திலிருந்து நீக்கிவிட்டது.  EVM மூலம் மோசடி செய்ய முடியும் என பல வல்லுநர்கள் நிருபித்த உள்ளனர் ஆனாலும் தேர்தல் ஆணையம் அதை கண்டு கொண்டபாடில்லை மேலும் EVM Machine தயாரிக்கும் Bharat Electronics நிறுவனத்தில் பாஜக கட்சியை சார்ந்த நான்கு பேர் Directorகளாக இருப்பதும் சந்தேகத்தை மேலும் வலுவுள்ளதாக்குகிறது எனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களும் மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களும் இந்த பிரச்சனையை கையில் எடுத்து தேர்தலை நிறுத்தவும் மீண்டும் ஜனநாயகம் காக்கப்பட வாக்கு சீட்டு முறையை கொண்டு வரவும் மக்கள் உரிமை இயக்கம் வேண்டுகோள் வைக்கிறது.
வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிமை இயக்கம் அமைப்பை சார்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் கூடி ஆலோசித்து யாருக்கு ஆதரவு என்கிற நிலைப்பாட்டை விரைவில் எடுப்போம் எனவும் இந்த தேர்தலில் மக்கள் உரிமை இயக்கத்தின் உறுப்பினர்களே தமிழக தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம் மேலும் எந்த கட்சி மக்கள் மேல் அக்கறைகொண்டு ஊழல்களையும் போதைபொருள் கடுமையான சட்டத்தை இயற்றுகிறதோ எந்த கட்சி விவசாயத்தை பாதுகாக்க உறுதி அளிக்கிறதோ,மதுக்கடைகளை முற்றிலுமாக ஒழிக்க முன் வருகிறதோ அவர்களுக்கு எங்கள் ஆதரவு எனவும் உறுதியாக இருக்கிறோம்.  எங்களுடைய நோக்கம் இலட்சியம் இந்திய ஜனநாயக மாண்பு பாதுகாக்கப்படவும் ஊழலற்ற மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே ஆகும்.
நிறுவனர் மற்றும் தலைவர் கோபால் , மாநில துணைத் தலைவர் சாய்ராம் கிருஷ்ணா, மாநில ஒருங்கிணைப்பாளர் பாரி வள்ளல், திருவள்ளுவர் மாவட்ட இணைச்செயலாளர் கார்த்தி, அம்பத்தூர் பகுதி பொறுப்பாளர் தேவசிகாமணிமக்கள் உரிமை இயக்கம் அட்மின் சாந்தனு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!