தொலைக்காட்சி

ஜெயா டிவியில் ஆங்கில புத்தாண்டன்று ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிகள்

128views
’நாளை நமதே’

ஜெயா டிவியில் வரும் ஆங்கில புத்தாண்டன்று ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘நாளை நமதே’. இதில் தமிழகத்தின் பிரபல ஜோதிடர்களான ஆச்சார்யா திரு.ஹரீஷ் ராமன், நங்கநல்லூர் பஞ்சநாதன், திருக்கோயிலூர் ஹரிபிரசாத் ஷர்மா, நாகை சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்று 2024ம் ஆண்டில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கும் எப்படியிருக்கப்போகிறது என்பது குறித்து விரிவாக விளக்கவுள்ளனர். அதோடு, புத்தாண்டில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படப்போகிறது, இயற்கை சீற்றங்கள் இல்லாத ஆண்டாக வரும் ஆண்டு அமையுமா, திரைத்துறைக்கு 2024 எப்படியிருக்கப் போகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஜோதிடர்கள் நுட்பமாக கணித்து பதில் சொல்கின்றனர். இந்நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்குகிறார். ’நாளை நமதே’ நிகழ்ச்சி ஜனவரி 1ம் தேதி திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
“இசை பயணம்”

ஜெயா டிவி யில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி “இசை பயணம்”
இந்த புத்தாண்டை மேலும் இனிமையாக்க திரைப்பட பின்னணி பாடகி மற்றும் கர்நாடக பாடகியான டாக்டர்.சாருலதா மணி,பல வெற்றி பாடல்களை பாடி மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற இவர் ராகங்களை மையப்படுத்தி வெளிவந்த நம் மனதில் நீக்கமற கலந்திருக்கும் திரைப்பட பாடல்களை பாடி , அந்த பாடல் பின்னால் ஒளிந்து இருக்கும் பல சுவாரசியமான கதைகளை பற்றியும் அந்த பாடல்களை இசையமைத்த இசையமைப்பாளர் பற்றியும் நம்முன் இசை வழியான நம் கண்களுக்கும் காதுகளுக்கும் ஜெயா டிவி வாயிலாக விருந்தளிக்க உள்ளர். இந்நிகழ்ச்சி வரும் புத்தாண்டு தினத்தன்று காலை 9.00 மணிக்கு “இசை பயணம் ” ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.
“சில பல வருடங்கள்”

ஜெயா டிவி யில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி “சில பல வருடங்கள்”
ஜெயா தொலைக்காட்சியில் விநாயகர் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ஸ்ரீ ஐஸ்வர்யா உடன் நகைச்சுவை நடிகர் சதிஷ் கலந்து கொண்டு பல தான் கடந்து வந்த பாதையை நம்முடன் பகிர்ந்த ஒரு கலகலப்பான நேர்காணல் “சில பல வருடங்கள்”
ஜெயா டிவி யில் வரும் திங்கட்கிழமை புத்தாண்டு அன்று மாலை 05.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!