தமிழகம்

தூத்துக்குடி வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

111views
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்
தென் மாவட்டங்களான தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டமே வெள்ள காடாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் பகுதி கொங்கராய குறிச்சி கீழத்தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அனுஷ்யா மயில் பெருமாள்(27) என்ற 9 மாத கர்ப்பிணி பெண் சிக்கியுள்ளார்.
இரண்டு மாடி அளவிற்கு வெள்ளநீர் தேங்கியால் என்ன செய்வது என்று தெரியாது திக்குமுக்கு ஆடியுள்ளனர். இதை எடுத்து அனுசியா மயிலின் தாயார் மொட்டை மாடிக்கு சென்று உதவி கிடைக்குமா என்று தேடி உள்ளார்.

இந்த நேரத்தில் மதுரையிலிருந்து மீட்புப் பணிக்கு சென்ற ஹெலிகாப்டரை பார்த்து கை தூக்கி உதவி கேட்டுள்ளார். இதை அறிந்த மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு கர்ப்பிணி பென்னை பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பேட்டி: சேது லெட்சுமி (கர்ப்பிணி பெண் தாயார்)

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!