தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொசு ஒழிப்பு. விழிப்புணர்வு முகாம்

110views
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும் வீட்டின் மொட்டை மாடியில் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் பயன் படாத பொருட்கள், டயர் ,உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் ஓடுகள் இது போன்ற பொருட்களில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் என மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.  வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் பின்புறம் நீர் தேங்கி கொசுக்கள்உற்பத்தியாகும் வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும் இதன் காரணமாக காய்ச்சல் வராமல் பாதுகாக்க முடியும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!