தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்; மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

121views
தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை அஞ்சல், முகமதியா நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு தமிழ், கணக்கு, தமிழ் தகுதித் தேர்வு ஆகிய பாடங்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகளாக அலுவலக வளாகத்தில் காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பு, முற்றிலும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஆகும். போட்டித்தேர்விற்கு தயாராகும் ஆர்வலர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யேகமாக https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லைன் தேர்வு எழுதுதல், பாடக்குறிப்புகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். மேற்காணும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 9790117327  தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!