தமிழகம்

பாலஸ்தீன மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்திய இஸ்ரேலை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக எஸ்டிபிஐ கட்சி பதாகை ஏந்தி முழக்கம்

378views
தமிழகம் முழுவதும் வெள்ளிகிழமை ஜீம்மா தொழுகை முடித்து விட்டு பாலஸ்தீன மருத்துவமனை மீது இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியதை கண்டித்து பதாகை ஏந்தி முழக்கம் நடைப்பெற்றது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டதி ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய நகரங்களில் பள்ளிவாசல் அருகில் தொழுகை முடித்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டிக்கும் விதமாக பதாகைகள் ஏந்தி முழக்கம் நடைபெற்றது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கண்டிக்கும் விதமாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர் குற்றவாளியாக அறிவித்திட ஐ.நா மன்றத்தை வலியுறுத்தி கோஷங்களை முழக்கமிட்டனர். இதில் நிர்வாகிள் மற்றும் ஜமாத்தினர் அனைவரும் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!