தமிழகம்

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

69views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளியுடன் இணைப்பதை கண்டித்தும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி கள்ளர் கல்வி கழக தேர்தல் நடத்திடவும் கல்லூரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கல்லூரி கல்வி இணை இயக்குநர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி பொறுப்பு முதல்வர் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கதிரவன், மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி, மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் , மாநில நிர்வாகிகள் பாஸ்கரபண்டியன், ஐ.ராஜா , எல்.எஸ்.இளங்கோவன், ஆதிசேடன், வடிவேல், வழக்கறிஞர் திருப்பதி, ஆர்.பாண்டி, பிபி. இலயரசு, சாமி, சபரி, ஆச்சி ராஜா, தேனி சக்கரவர்த்தி, முருகன், திண்டுக்கல் சந்தனதேவர், ஜெயதீபன் மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!