தமிழகம்

மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மனு

192views
தமிழகம் முழுவதும் வருகின்ற 29ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.  இந்த படத்தில் ஜாதி வெறியை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதாக பல்வேறு கட்சியினர் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் சங்கிலி தலைமையில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது.  இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மனு அளித்தனர்.
இதில்மாநில அமைப்பு செயலாளர் ஆனந்தன், மாநிலச் செயலாளர் பாண்டியராஜன், மாநில வழக்கறிஞர் பிரிவு தருமர், மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் சேதுராமன், உட்பட தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!