சினிமா

The Elephant Whisperers – திரை விமர்சனம்

128views
முதுமலை வனப்பகுதியில் தாய் தந்தையை இழந்த யானைகளை வளர்க்கும் பொம்மு பெள்ளி தம்பதிகளின் யானை வளர்ப்பை ஆவணப்படமாக்கியவர்கள் ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார்கள்.  பெற்றோர்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகள் மேல் காட்டும் அன்புக்கு சற்றும் சளைத்ததல்ல.
பொம்முவும் பெள்ளியும் யானை மேல் காட்டும் அன்பு.  ரகு,அம்மு ஆகிய இரு யானைக்குட்டிகள் நாற்பது நிமிடத்தில் நமக்கும் செல்லக்குட்டிகளாகி விடுகிறார்கள்.  குட்டி யானைகளின் சேட்டையும்,குறும்பும்,லாவகமும் சொன்ன சொல்லுக்கு கட்டுப்படும் பண்பும் வியப்பளிக்கிறது.  முதுமலையின் அழகும்,வனம் மற்றும் வன விலங்குகளின் வசீகரமும் நெஞ்சை அள்ளுகின்றன.

தமிழ் போலவே ஒலிக்கும் படுகர் இன மொழி பேசும் பொம்முவும் பெள்ளியும் தங்கள் கானக யானை வளர்ப்பு அனுபவங்களை நம்மிடம் சொல்ல அவர்களிடம் அதிக வார்த்தைகள் இல்லை.  ஆனால் அதிக அர்த்தமுள்ள வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள்.

ஆவணப்படப் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்ற இயக்குநர் கார்த்திகி, தயாரிப்பாளர் குன்நிட் மோங்கா இரு பெ(க)ண்மணிகளுக்கும்  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
காரைக்கால் கே.பிரபாகரன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!