தமிழகம்

மதுரை டிபிகே சாலையில் அரசு பஸ் மோதி முதியவர் பலி : சிசிடிவி காட்சிகள் வெளியீடு – பரபரப்பு

322views
மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பரப்பரப்பான சாலைகளில டி.பி.கே சாலை ஒன்றாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதும், வருவதுமாக இருக்கும் இருக்கும் நிலையில் நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து மாடக்குளம் செல்லும் பேருந்து எண் (TN-58/N-0932) இந்த சாலையில் சென்று கொண்டிருந்தது.
மேயர் முத்து பாலம் அருகே சென்ற போது மதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த கனகசுந்தரம் மகன் ராமர் என்ற 60 வயது முதியவர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது பின்னால் வந்த இந்த அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே தூக்கி விடப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம்,  மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!