எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் அருகே உள்ள கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வட மேற்கு திசையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது இது நான்காவது முறையாகும். மேலும் இந்த மாதத்தில் மட்டும் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.