79views
சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-ல் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், ரூ.97 கோடியில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும்.
ஆர்சிஎஃப் மற்றும் எம்சிஎஃப் தொழிற்சாலைகளில் மொத்தம் 95 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இப்பணிகள் இன்னும் இரு மாதங்களில் நிறைவடைய உள்ளன.
இதையடுத்து, சென்னை ஐசிஎஃப்-ல் ஏற்கெனவே ரயில் வாரியம் அளித்துள்ள அனுமதியின்படி மொத்தம் 51 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.