தமிழ்நாட்டில்இளநிலைபொதுமருத்துவகலந்தாய்வில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது .
எம் . பி . பி . எஸ் ., பி . டி . எஸ் . உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான பொது கலந்தாய்வு இணையவழியில் நடைபெற்று வருகிறது . முதலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளை தேர்வு செய்தனர். இந்நிலையில் பொதுப் பிரிவு கலந்தாய்வு அதனைத் தொடர்ந்து நடைபெற்றது.
நீட் தேர்வின் அடிப்படையில், மாணவர்கள் விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்துள்ள நிலையில், இன்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது.
மாணவர்கள் ஏற்கனவே தாங்கள் தேர்வு செய்த கல்லூரிக்கு நேரில் சென்று, அசல் சான்றிதழ்களை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 6,639 இடங்களுக்கு தரவரிசைப்பட்டியலில் உள்ள 6,082 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 3848 இடங்களும், இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 75 இடங்களும், சுயநிதி மருத்துவ கல்லூரியில் 1368 இடங்களும் உள்ளன.