98views
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
2018 முதல் மின் இணைப்பு பெற விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டது.
மின்சார கட்டணத்துக்கு ஜிஎஸ்டி என்பது கிடையாது. தற்போதுள்ள ஆட்சியில் புதிதாக மின் துறையில் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அது உண்மையல்ல. கடந்த ஆட்சியிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது கூட அவர்களுக்கு தெரியவில்லை. விவசாய இலவச இணைப்புக்கு கடந்த ஆட்சியிலேலே மீட்டர் பொருத்தப்பட்டது என்றார்.