சென்னை திருவொற்றியூர் அரிவாகுளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு டி ப்ளாக்கில் இருந்த 24 வீடுகள் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது.
நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று குடியிருப்பு தரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த சூழலில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிந்து விழுந்த பகுதிகளை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியை முத்தாரம் தலைமையிலான மூவர் குழு ஆய்வு மேற்கொண்டது. சிமெண்ட் பூச்சு ,செங்கல், கான்கிரீட் பயன்படுத்த இரும்பு கம்பி உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்துச் சென்று ஆய்வுக்கு எடுத்து சென்றது. அதன் கட்டுமானம் மாதிரிகளை வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், தங்க தற்காலிகமாக தங்குவதற்கு மாத வாடகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அருகிலேயே அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகளை ஆய்வு செய்ய 5 குழுக்களை நியமித்தது தமிழ்நாடு அரசு. டிசம்பர் 31ல் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தினமும் மாலை 5 மணிக்குள் அன்றைய நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கவும் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.