DubaiExpo 2020

Saaral service world & Naan Media Jointly presents Expo 2020 Dubai Tour

179views

க்ஸ்போ-2020 என்றால் என்ன? இதில் என்ன இருக்கப்போகிறது? எதற்காக இவ்வளவு ஏற்பாடுகள்? இன்னொரு குலோபல் வில்லேஜ் போன்றதா? என பல்வேறு சந்தேகங்கள். சிலருக்கு இதைப் பற்றி தெரியும், இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு சிறிய தொகுப்பாக உங்கள் புரிதலுக்காக இந்த பதிவு.
அரபு நாடுகளிலேயே நடத்தப்படும் மிகப் பெரிய நிகழ்வு இது (Expo 2020). இது மனிதர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் சந்திப்பு இருக்கும், கலை, கலாச்சாரம், புவியியல், அறிவியல், தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் கண்டு களிக்கவும் அதைப் பற்றி தெரிந்து கொள்ளவும் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.

எக்ஸ்போ என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய நிகழ்வு. இது எந்த நாட்டில் நடைபெறும் என்பதை பாரிசில் உள்ள ஒரு அமைப்பு பியூரோ இன்டர்நேஷனல் தான் தேர்ந்தெடுக்கும். இந்த எக்ஸ்போ ஏதாவது ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு தான் நடத்துவார்கள். 1851 ஆம் ஆண்டில் லண்டனில் முதலில் தொடங்கப்பட்டது, அதனுடைய கருப்பொருள் “இண்டஸ்ட்ரி பார் ஆல் நேஷனல்”. அதன் பிறகு ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வெவ்வேறு கருப்பொருளை கொண்டு வெவ்வேறு நாடுகளில் நடைபெற்றது. கடைசியாக நடந்த எக்ஸ்போ இத்தாலியிலுள்ள மிலானோ வில் 2015 ஆம் ஆண்டு “பீடிங் பிளான்ட் எனர்ஜி பார் லைஃப்” என்ற தீவில் நடைபெற்றது இறுதியாக நடைபெற்ற போட்டியில் துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எக்ஸ்போ. 2020 ஆம் ஆண்டு நடைபெறாத காரணத்தினால் 2021 ஆம் ஆண்டு தான் நடைபெறுகிறது. இதற்காக 430 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக பல நாடுகளுக்கான தனித்தனி பெவிலியன்கள் உள்ளது. எக்ஸ்போ 2020 “கனெக்டிங் மைன்ன்ஸ் கிரியேட்டிங் புயூச்சர்” என்ற கருவை மையமாக வைத்து, ஆப்பர்சூனிட்டி, மோபிலிடி சஸ்டைனபிலிட்டி என பிரிக்கப்பட்டுள்ள்து.

எக்ஸ்போ 2020 காரணமாக துபையில் அதிகமான வர்த்தகம் நடைபெறும், ஹாஸ்பிடாலிடி செக்டார்்பிசியாக இருக்கும், வெளிநாட்டு இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும். இதில் 25 மில்லியன் பார்வையாளர்கள் உலக நாடுகளில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 30% UAE விலுந்தும் 70% மற்ற உலக நாடுகளிலிருந்தும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 முடிந்ததும் இந்த நிகழ்வு நடத்தப்பட்ட இடங்களில் ஐடி பார்க், ரெசிடென்சியல் காம்ப்ளக்ஸ், ரெஸ்டாரன்ட்ஸ் மற்றும் பல பொழுதுபோக்கு தளங்கள் உருவாக்கப்படும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!