216
சமூகம் வரண்டு போய் கிடக்கிறது சாதி எனும் நோய் மக்களை வாட்டி வருகிறது ,மதம் எனும் விஷம் இரத்ததில் கலந்திருக்கிறது .இந்த மக்களை இந்த மண்ணை கரம் பிடிக்கவும் காதலிக்கவும் ஒருவன் தேவை .
போராட்டங்கள் ஒரு புறம் வேண்டுகோள்கள் ஒரு புறம் ஊருக்கு வெளியில் அலறல் ஓசை தூரத்தில் கேட்டுகொண்டிருக்கிறது .வேதனைக்குள்ளாகி இருக்கும் அத்தனை மக்களும் தங்களை ஒருவன் வந்து காப்பாற்றுவான் அவன் தங்களை மீட்பான் என்று வைராக்கிய மனதுடன் தங்கள் மீது ஏற்றபடும் கொடுமைகளை தாங்கி கொண்டிருக்கின்றனர் .
ஒரு நாள் மக்களை கடவுள்களின் பேரில் அடிமையாக்கி வைத்துள்ள எஜமான்களின் கோட்டைகளில் அபாய சங்கு ஒலிக்கிறது ,தூரத்தில் ஊரை அழித்து வரும் வெள்ளைத்தீயை கண்டு அவர்கள் பதற்றமடைகின்றனர் .அந்த வெள்ளைத்தீ அவர்களை பயமுருத்தி ஊரை அழித்து எஜமானர்கள் உட்பட மக்களையும் அடிமையாக்குகிறது .
“இப்பொழுது ஒரு பேரமைதி ,அனைவரும் இருளில் சமமாக அடிமைக்குகைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் ” .
புதிதான அந்த எஜமானர்களுக்கு அந்த அடிமை குகையின் தோற்றம் விலங்கவில்லை ,இந்த எஜமானர்களுக்கு மற்ற அடிமை மக்கள் தன்னுடன் சமனுக்கு சமமாக குகையில் அடைந்திருப்பது பிடிக்கவில்லை .அங்கு உள்ள சில சானக்கிய எஜமானர்கள் கூட்டாக பேசி ஒரு முடிவுக்கு வருகிறார்கள் .
அந்த குகையின் ஒரத்தில் உள்ள ஒரு சின்ன கல்லின் மீது ஏறிய ஒரு சானக்கியன் ,நண்பர்களே கொஞ்சம் செவி சாயுங்கள் என்றான் ,திரும்பி பார்த்த அடிமை மக்கள் முழித்தார்கள் .
அந்த சானக்கியன் மக்கள் அனைவரும் தன் பேச்சை கேட்குமாரும் அதை கேட்டு ஒற்றுமையுடன் செயல்பட்டால் இந்த வெள்ளைத்தீயை அனைத்து விடலாம் என்றும் கூறினான் .
தூரத்தில் இருந்து ஒரு குரல் . “நாங்கள் ஏன் வர வேண்டும் ” ,திரும்பி பார்த்த சானக்கியன் கோப முகத்துடன் “ஏன்டா அடிமைகளா எங்கள் தகுதிக்கு மீறி உங்களிடம் இறங்கி வந்து பேசுகிறோம் அத நீ எதிர்த்து கேள்வி கேக்கிறியா ” என்ற கத்துக்கிறான் .
குரலாக இருளில் இருந்து வெளியே வந்த அந்த இளைஞன் மீண்டும் அடிமைகளாக நாங்கள் விரும்பவில்லை ,இது உங்களின் அயோக்கிய தனங்களில் ஒன்று என்றான். கோபம் கொண்ட சானக்கியன் அந்த இளைஞனை அடிக்க கை ஓங்கினான் இதை பார்த்த கொண்டிருந்த மக்கள் அனைவரும் வெகுண்டெழுந்தனர் .
மக்களின் குரல் இளைஞனுக்காகவும் எஜமானர்களுக்கு எதிராகவும் இருந்தது, அந்த மக்களின் சத்தம் நிலை குலைய செய்தது அவர்கள் எழுந்து நின்றவுடன் தான் சானக்கியர்களுக்கு தெரிந்தது மக்களின் வழு என்ன வென்று இரு அடி பின் வாங்கியவர்கள் தங்களின் குரல்களை தாழ்த்தினர் .
இந்த நேரத்தில் குகைக்கு வெளியே ஊரை அழித்து வந்த நெருப்பு சற்று வேகம் குறைய துவங்கியது ,சானக்கியர்கள் சிரித்து கொண்டே விடுதலை விடுதலை என முழக்கமிட்டனர் .
மக்கள் கூட்டத்தை பார்த்த அந்த இளைஞன் உன்மையான விடுதலை என்பது மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று , தீ இங்கிருந்து அகன்று விட்டால் இந்த சானக்கிய கூட்டம் கடவுள் உனக்கு இச்சென்மத்தில் இவ்வளவு தான் கொடுத்திருக்கிறான் இத்தோடு வாழ் என பழயை படி நம்மை அடிமை செய்ய துவங்கிவிடுவார்கள்.
அப்போது மக்கள் “இவ்வளவு காலம் அடிமைபட்டு கிடந்தது போதும் நாங்கள் இனி அடிமையாக மாட்டோம் எங்கள் கரங்கள் ஆயுதம் ஏந்தி இவர்களை எதிர்க்கும்” என கூறி கோசமிட்டனர் . அதற்கு அந்த இளைஞன் ஆயுதம் என்பது பொருளாக இல்லாமல் கருத்தாக இருக்க வேண்டும் அனைவரும் “சமம்” என்பதே அந்த கருத்தாகும் .
ஆனால் அது மட்டுமே நம்மை காத்து விடாது நாம் இத்தனை காலம் பட்ட கஷ்டம் நம் உடலை புண்ணாக்கி விட்டது ,இதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே மருந்து அன்பு மற்றும் காதல் தான் இந்த மருந்து தான் மனித குலத்தின் கடைசி நம்பிக்கை ,இவையே நம்மை ஆரோக்கியமான வாழ்வை வாழ வழிவகுக்கும் என்றான் .
தீ முழுவதும் ஓய்ந்தது குகையில் இருந்து வெளியே வந்த மக்கள் இரு திசைகளாக பயனித்தனர் இன்னும் இளைஞன் மீது நம்பிக்கை இல்லாத ஒரு சாரார் சானக்கியர்கள் காட்டிய பழயை பாதையில் சென்றனர் .
மற்றொரு பிரிவு மக்கள் அந்த இளைஞன் காட்டிய புதிய பாதையில் பயனத்தை துவங்கினர்.இந்த புதியபாதையில் செல்லும் மக்கள் தங்களுக்கு வழிகாட்டிய இந்த இளைஞனை தங்களின் தலைவனாகவும் ,தங்களின் நண்பனாகவும் மற்றும் தங்களுக்கு பிடித்த கோணங்களில் கொண்டாடிச்சென்றனர்.செல்லும் வழியில் தங்கள் காயங்களுக்கு காதல் எனும் மருந்தை பகிர்ந்திட்டு சென்றனர் . அவர்களின் இலக்கு சமத்துவம் அதன் இலக்கு வெகுதூரம் இல்லை ….
தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று ,சமூகநீதி சமவுரிமைக்காக போராடிய பெரியார் இறந்தாலும் அவரின் மாபெரும் சனாதான எதிர்ப்பலை இன்றும் ஓயவில்லை ,சமத்துவத்தின் இலக்கு வெகு தூரம் இல்லை .அவர் கட்மைத்த தேரை இன்றைய காதலர்கள் முன்னெடுத்து இழுத்து சென்று கொண்டுதான் இருக்கின்றனர் .
-
கே.எஸ்.விஷ்ணுகுமார்
add a comment