தமிழகம்

செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக அனுசரிப்பு: அரசாணை வெளியீடு

39views

செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக அனுசரிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில், 6ம் தேதி, பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி (நாளை) ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாள்’ ஆக கொண்டாடப்படும் என் முதல்வர் அறிவித்தார். அதன்படி, சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறி தள்ளி, பெண்களை சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் நாள் ஆண்டுதோறும் தலைமை செயலகம் தொடங்கி,

அனைத்து அரசு அரசு அலுவலகங்களிலும் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியை எடுத்துக் கொள்ளும் விதமாக கீழ்க்ணடவாறு உறுதிமொழியை அனுசரிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும்- யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்! சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!